Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு மாகாண 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களினை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுத்தாக்கலை இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்கள் முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இதனடிப்படையில் இது குறித்த வழக்கு நேற்று ( 03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து செய்வதாகவும், அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி அளித்திருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர் தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
கிண்ணியா மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை!

கிண்ணியா மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு