மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அதிகளவான பொலிஸார் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை(11) நண்பகல் 12 மணியுடன் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிவடையவுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு, வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய குறித்த பகுதிக்கு வருகை தந்ததையடுத்து இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இன்று(10) நள்ளிரவுடன் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிறைவடையவுள்ளன.