கருணாவால் மாத்திரமே கிழக்கை காப்பாற்ற முடியும் என அவரின் விசுவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்பான கிழக்கு வாழ் தமிழர்களே………,!
தமிழர்கள் அவர், இவர் என்று அனைவரையும் பாராளுமன்றம் அனுப்பியுள்ளீர்கள் அவர்களினால் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு ஏதும் நடந்ததா என்றால் கேள்விக்குறியே?
இம்முறை உங்களின் பொன்னான வாக்குகளை அம்மானுக்கு அழித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
தேசியப்பட்டியலில் இருந்த வேளைகளிலே துணிந்து மக்களுக்காக பற்பல சேவைகளை புரிந்தவர், மக்கள் ஆணையோடு பாராளுமன்றம் சென்றால் எவ்வாறான சேவைகள் புரிவார் என சிறிது சிந்தியுங்கள்.
அம்மானின் ஆளுமை என்ன? திறமை என்ன? என்பனவற்றை சிறிது சிந்தித்து பாருங்கள்.
யுத்த காலத்தில், யுத்தகளத்தில் நேரடியாக நின்று செயற்பட்ட ஒரே ஒரு கட்டளைத்தளபதி கருணா அம்மான் மாத்திரமே.
இது அனைத்தும் நம் தமிழுக்கும், தமிழர்களுக்குமே. இக் கருத்தினை யாராவது மறுதலிக்கட்டும் பார்ப்போம்.
தமிழரின் தற்போதைய நிலையை அறிந்த நிலையான துணிச்சலான ஊழலற்ற ஒரு தலைவர் , அது கருணா அம்மான் மாத்திரமே.
01.கிழக்கிலுள்ள அரசியல் வாதிகள் யாராவது அம்மானைப் போல தமிழருக்காக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களா?
02.யுத்த களத்தில் நின்று போராடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? கூறுகள்?
கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலையூம் நிலையே கிழக்கு தமிழரின் நிலை.
அம்மான் எனும் சேவகனை பாராளுமன்றம் அனுப்பினால் மாத்திரமே கிழக்கு வாழ் தமிழர்கள் தலை நிமிர்ந்து, அபிவிருத்தியை ருசிப்பீர்கள்.
சிந்தித்து வாக்களிப்பீர்.