திடீர் சுகவீனமடைந்த நிலையில் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் சேனாதிராஜா அவர்களை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
இதன் போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு, அவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்துள்ளார்.