Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி 5 ஆயிரம் ரூபா நோட்டுக்கள் மற்றும் மண் அனுமதிப்பத்திரங்களுடன் ரி.எம்.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் கைது!

போலி 5 ஆயிரம் ரூபா நோட்டுக்கள் மற்றும் மண் அனுமதிப்பத்திரங்களுடன் ரி.எம்.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் கைது!

2 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள் ஆகியவற்றை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 3 பேரை எதிர்வரும் 22 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை(19) உத்தரவிட்டார்

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் குறித்த கட்சியின் தேர்தல் பிரச்சாரம் சம்பவதினமான நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தம்பட்டைவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று நகர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

இதன் போது குறித்த கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்து, வாகனங்களில் மட்டக்களப்பை நோக்கி குறித்த நபர்கள் பிரயாணித்துக் கொண்டிருந்த போது அக்கரைப்பற்று நகர்பகுதியில் குறித்த காரை விசேட அதிரடிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது காரில் இருந்தவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள், 200 துண்டுப்பிரசுரங்கள், மோதிர அளவு எடுக்கும் கேர்வை என்பவற்றுடன் 3 பேரை கைது செய்ததுடன் காரையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் எனவும், களுவாஞ்சிக்குடியில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட வரும், 2015 ம் ஆண்டு துப்பாகியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஒருவருமாக சித்தாண்டி மற்றும் வெலிகந்தை தரப்பளை பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினரது ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது

இதனையடுதது கைது செய்தவர்களை அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் இவர்களை நேற்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து இவர்களை எதிர்வரும் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேசமயம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
விருப்பு வாக்குக்காக முட்டி மோதிக்கொள்ளும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள்!

விருப்பு வாக்குக்காக முட்டி மோதிக்கொள்ளும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு