நீதிமன்ற உத்தரவுகளை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கும் மனநல மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, குறித்த ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







