நடிகர் வடிவேலு மீள்பிரவேசத்தில் நாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் அவருக்கு
வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர வேடத்தில் நடித்த
மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தற்போது வரை 50 கோடி இந்திய
ரூபாய் வசு10லித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முக்கியமாக
வடிவேலுவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருப்பதோடு வித்தியாசமான வடிவேலுவை மாரி
செல்வராஜ் திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் மறுபிரவேசத்தில் மாமன்னன் படத்தின் மூலம் வெற்றி பாதையை நோக்கி மீண்டும்
திரும்பி இருக்கிறார் வடிவேலு. இந்த நிலையில் அடுத்தபடியாக லைவ் இஸ் பியூட்டிபுல் என்ற
இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் மாரி செல்வராஜ்.