காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையில் இன்று (14) பெண்ணொருவர் பொது தேர்தலுக்காக வாக்களிக்க சென்று, அங்கு பணிபுரிந்த உத்தியோகத்தர் ஒருவரிடம் தான் கூறும் சின்னத்திற்கு வாக்களித்து தருமாறு உதவி கோரியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த உத்தியாகத்தர் பெண் கூறும் சின்னத்திற்கு வாக்களிக்காமல், வேறு சின்னத்திற்கு வாக்களிக்க புள்ளடியிட்டுள்ளார். இதை அவதானித்த பெண் இந்த விடயத்தை அங்கு இருந்த வேறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் அவர் கூறிய சின்னத்துக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.