சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று (25) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், முதலாவது குற்றச்சாட்டுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தச் சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







