தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஜ.நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது எனவே இலங்கை ஒரு பூகோள அரசில் நிலைப்பாட்டில் அமைந்திருக்கின்றது ஆகவே தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த பூகோள அரசியலை மையப்பாடாக கொண்டு தமிழர்கள் முடிவுகளை எட்ட வேண்டும் என்ற அதேவேளை தமிழ்களின் இனத்துக்காக குரல் கொடுக்க கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (24) வவுணதீவு கன்னங்குடா மாணிக்க பிள்ளையார் ஆலைய பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடர் ஏற்றி கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அவர் உரையாற்றுகையில்,
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி வீரகாவியமாகிய மாவீரர் செல்வங்களை போற்றி வணங்குவதற்கான ஒரு மாதம் நவம்பர் மாதம். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள தேசத்தினால் நினைவேந்தல் மறுக்கப்பட்டு தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு பாரிய கட்டமைப்பு ஊடாக இனழிப்புக்குட்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து தமது உரிமைக்காக போராடிய மக்களை ஒரு அடக்குமுறைக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசாங்கங்களும் மாறி மாறி வருகின்ற போது வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெற்று அவர்களின் உரிமைகளை பெற்று எல்லாவற்றையும் செய்து வருகின்றோம். “எல்லாம் செய்வோம் வாழ்வதற்கு உரித்தான காணி விடுவிப்போம் மானியம் நஷ்டஈடு வழங்குவோம்” என ஆட்சியை பிடித்து அரியாசனம் ஏறியதும் அவர்களின் உண்மையான முகத்தை காட்டுவார்கள் அந்த நிலை தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே தமிழ்ர்களின் வரலாற்றில் தமிழர்கள் ஏமாந்ததை தவிர தமிழர்களின் உரிமைக்காக எந்த சலுகைகளையும் பெற்றதில்லை அதேவேளை சிங்கள தேசத்தினுடைய அந்த பௌத்த மேலாதிக சிந்தனை, இனவாத சிந்தனை, தொடர்ந்தும் எம் தேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டு தொடர்ந்து இனழிப்புக் உட்படுத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச சமூகம் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடிய இனம் என அறிந்திருந்தும் கூட அதற்கான பரிகாரம் கிடைக்கவில்லை. தமிழர்கள் இங்கு தொடர்ந்து இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியை வடக்கு கிழக்கில் கடந்த 76 வருடங்களாக இடம்பெற்ற இன படுகொலைகளின் ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது அதில் ஒன்று தான் செம்மணி படுகொலை இருந்தபோதும் 76 வருடங்களாகியும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இலங்கை ஒரு பூகோள அரசியல் நிலைப்பாட்டில் அமைந்திருக்கின்றது ஆகவே தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த பூகோள அரசியலை மையப்பாடாக கொண்டு தமிழர்கள் முடிவுகளை எட்ட வேண்டும் அதேவேளை தமிழ்களின் இனத்திற்காக குரல் கொடுக்க கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த தீவில் ஒரு சம உரிமையோடு வாழக்கூடி அரசியல் தீர்வுக்காக போராடிய அந்த போராளிகளின் அந்த இலட்சியத்தை போர் முடிந்து 17 வருடங்களாகிய நிலையில் அதனை சுக்கு நூறாகிவிட்டு தங்களுடைய தனிப்பட்ட தலைமைகளுக்காக போராடுகின்ற ஒரு அரசியல் கலாச்சாரம் இன்று வடக்கு கிழக்கில் நிலவுகின்றது.
தங்களுடைய தலைமைகளுக்காக பதவிகளுக்கா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களையும் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட எங்கள் மக்களின் தியாகங்களையும் தங்களின் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகின்ற ஒரு அவல நிலையை எங்கள் இனம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இன்று ரோங்கியா முஸ்லீம்களுக்கு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக ஐ.நாடுகள் தீர்பளித்துள்ளது ஆனால் தமிழ் மக்கள் சுமார் 3 இலச்சம் பேர் இனப்படுகொலை இடம்பெற்று அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றபோது ஐ.நாடுகள் சபை இனப்படுகொலை நடைபெற்றது என்பதை அங்கீகரிப்பதற்கான அந்த சந்தர்ப்பத்தை இந்த பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது.
எனவே தங்களின் உரியை தியாகம் செய்த மாவீரர்களின் இலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். எங்கள் கொள்கை மீது நாங்கள் உறுதியாக நிக்க வேண்டும் எனவே அந்த அரசியல் நிலைப்பாட்டில் யார் நிக்கின்றார்களே அந்த தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கிறது.
தாங்கள் படித்தவர்கள் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் என வருகிறவர்களுக்கு நீங்கள் கண்மூடித்தனமாக உங்களுடைய வாக்குகளை அளித்தும் அவர்கள் அந்த வீர மறவர்களின் அந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு மாறாக அவர்கள் தங்களுடைய பதவிகளுக்கு தங்களை வளர்த்துக் கொள்வதற்காக செயல்பட்டுள்ளனர் இன்றும் அவ்வாறான சூழல் இருக்கிறது.
சர்வதேச நாடுகளுக்கு சென்று பேசும் போது அவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாயின் தமிழ் தலைமைகள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு கொள்கையில் இருந்தால் தான் உங்கள் இனத்துக்கான உரிமையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர் ஆகவே மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது தமிழ் மக்களின் உரிமை போராட்டம்.







