Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மஞ்சள் ஆடையில் நாடாளுமன்றம் வந்த ஹரிணி, சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள்; என்ன காரணம்?

செம்மஞ்சள் ஆடையில் நாடாளுமன்றம் வந்த ஹரிணி, சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள்; என்ன காரணம்?

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25) செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செம்மஞ்சள் நிற ஆடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நோக்கி கருத்துத் தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே தாம் செம்மஞ்சள் நிற ஆடையை அணிந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், இலங்கையின் தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கான சுதந்திரத்தையும் சம உரிமைகளையும் உறுதிப்படுத்துதல் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் செம்மஞ்சள் நிறம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளற்ற எதிர்காலத்தைக் குறிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இந்நிறம் முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!
செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!

November 26, 2026
மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!
செய்திகள்

மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!

November 26, 2026
மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

November 26, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்

November 26, 2026
வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

November 26, 2026
Next Post
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை; விசேட செயற்குழு மீது நம்பிக்கையில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை; விசேட செயற்குழு மீது நம்பிக்கையில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு