Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை; விசேட செயற்குழு மீது நம்பிக்கையில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை; விசேட செயற்குழு மீது நம்பிக்கையில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

29 minutes ago
in அரசியல், செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாடுகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்குழுவில் முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக இருக்க விரும்பாத காரணத்தினாலேயே அதன் கூட்டங்களில் பங்கேற்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என அதன் தலைவரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு உண்மையான ஆர்வம் இல்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள விசேட செயற்குழுவின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்றும், கடந்த செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கை எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அன்றைய தினமும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் காலம் மேலும் நீடிக்கப்படலாம் எனத் தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த யோசனைகள் தொடர்பில் விசேட செயற்குழு உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தற்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, புதிய சிக்கல்களை உருவாக்கும் வகையிலேயே செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்பதே தமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் காலதாமதமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியாது என்பதாலேயே விசேட செயற்குழுக் கூட்டங்களில் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நபர் ஒருவரையும் அவரின் குடும்பத்தையும் இலக்கு வைத்து போலிப் பதிவுகள்; வைத்தியர் ஒருவர் கைது!
செய்திகள்

நபர் ஒருவரையும் அவரின் குடும்பத்தையும் இலக்கு வைத்து போலிப் பதிவுகள்; வைத்தியர் ஒருவர் கைது!

November 25, 2026
சொகுசு வாகன வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!
செய்திகள்

சொகுசு வாகன வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

November 25, 2026
ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
செய்திகள்

ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

November 25, 2026
செம்மஞ்சள் ஆடையில் நாடாளுமன்றம் வந்த ஹரிணி, சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள்; என்ன காரணம்?
செய்திகள்

செம்மஞ்சள் ஆடையில் நாடாளுமன்றம் வந்த ஹரிணி, சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள்; என்ன காரணம்?

November 25, 2026
வடக்கு கிழக்கில் மாவீரர் இலட்சியத்தை மறந்து தனிப்பட்ட தலைமைகளுக்காகப் போராடும் அரசியல் கலாச்சாரம்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

வடக்கு கிழக்கில் மாவீரர் இலட்சியத்தை மறந்து தனிப்பட்ட தலைமைகளுக்காகப் போராடும் அரசியல் கலாச்சாரம்; தர்மலிங்கம் சுரேஸ்

November 25, 2026
தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
செய்திகள்

தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

November 25, 2026
Next Post
ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு