ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை சீனா மற்றும் ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த தாக்குதல் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை முற்றிலும் மீறுவதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இவை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.








