காலி, ஹக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (23) அதிகாலை ஒரு வீட்டின் மீது 9 மிமீ துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் மிதிகம பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார், மேலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊழியருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
குறித்த ஊழியர் முன்னர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








