Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பொலிசார் மீது கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம் – மூவர் கைது

மட்டக்களப்பில் பொலிசார் மீது கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம் – மூவர் கைது

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளாலும் இன்று (25) பிற்பகல் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த திருடன் அவனது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் 01.30 மணியளவில் அவனை கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று அவனை கைது செய்ய முற்பட்டனர்.

இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிசார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
Next Post
மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு