Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனிய பாரதி குழுவினர் மீது சந்தேகிக்கப்பட்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

இனிய பாரதி குழுவினர் மீது சந்தேகிக்கப்பட்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புட்ட இனியபாரதி மற்றும் தவசீலன் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கைது செய்து செய்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் (06) திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் அவரது சகாவான சசீதரன் தவசீலன் கைது தொடர்பாக குற்றவிசாரணைப் பிரிவினர் நேற்றுமுன்தினம் (6) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

இந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், மேற்கூறிய குற்றங்களில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை மேற்கூறிய பிரிவின் அதிகாரிகள் குழு 2025.07.06 அன்று திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் 45 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்தது

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவர்.

அவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணாஅம்மான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

இரண்டாவது சந்தேக நபரரான தவசீலன் முதல் சந்தேக நபரின் சீடராகப் பணியாற்றியவர், இவர்கள் இருவரும் முதன்மையாக கிழக்கு மாகாணத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தலைமையில் குற்றங்களைச் செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்களின் உதவி மற்றும் உடந்தைகள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,

2005.02.07 அன்று பொலன்னறுவை வெலிகந்த புல்லேயரடி பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட 06 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2007.05.09 அன்று சிந்துஜன் என்ற ஜோன்சன் ஜெயகாந்தன் படுகொலை செய்யப்பட்டார்.

2007.06.28 அன்று திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தில்லைநாயகம் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டார். 2007.07.27 அன்று திருக்கோவிலைச் சேர்ந்த சிவனடிகன் அழகுராசா கடத்தப்பட்டார். 2008.04.20 அன்று கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதி கிராம சேவை உத்தியோகத்தர்களான கந்தையா நாகராசா மற்றும் கனகரத்தினம் ஆனந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

25.09.2008 அன்று, திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த திருமால் திருச்செல்வம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 21.11.2008 அன்று, திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இராசையா கோபுலன் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

21.12.2022 அன்று அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் இந்த சந்தேக நபர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

முதல் சந்தேக நபர் இனியபாரதி தொடர்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைய அறிக்கைகளின்படி, கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை கூடங்களை நடத்துதல் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு நபராகவும் அவர் பெயரிடப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், நேற்று இனிய பாரதியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.