Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

1 year ago
in செய்திகள்

முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் விரும்பவில்லை.

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங் மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதை கண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவர் கோபம் அடைந்தார்.

காதலித்தபோது அந்த மாணவரும், அந்த பெண்ணும் பரிமாறிக் கொண்ட அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள் மாணவனின் செல்போனில் இருந்தது.

இதனால் அந்த பெண், மாணவனின் செல்போனில் உள்ள தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி மாணவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் நீக்கிவிடும்படி பலமுறை அந்த பெண் கேட்டபோது, மாணவன் தனது நண்பர்களிடம் அவற்றை காட்டியதாக கூறினார். மேலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.

இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களையும் வைத்திருப்பதை நினைத்து கவலைப்பட்ட அந்த பெண், தனது நெருங்கிய தோழியின் உதவியை நாடினார்.

தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. இந்த பிரச்சினையை தோழி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து தோழி ஏற்பாட்டின்பேரில் 12 பேர் கும்பல் கடந்த ஜூன் மாதம் 30-ந் திகதி இளம்பெண்னின் முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவரை ஹெசரகட்டாவில் உள்ள ஏஜிபிலேஅவுட்டுக்கு காரில் கடத்தி வந்தனர்.

அங்குள்ள ஏரிக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை கார் அடைந்தது. பின்னர் அந்த மாணவரை தரையில் உட்கார வைத்து, மற்றவர்கள் சுற்றி நின்று பிரம்பு கம்பால் இரக்கமின்றி அடிக்க தொடங்கினர். மேலும் முன்னாள் காதலி வாலிபரை நிர்வாணப்படுத்தி ஓட, ஓட விரட்டி தாக்கினார். பின்னர் அந்த இளம்பெண் தனது செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார்.

அப்போது அந்த பெண், அவரிடம் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நீக்குமாறு கூறினார். அதற்கு அவர் அனைத்தும் செல்போனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார்.

இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சந்தேகம் அடைந்து மாணவரின் செல்போனை வாங்கி அதில் இருந்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீக்கினார்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முன்னாள் காதலன் இது குறித்து சோலதேவனஹள்ளி பொலிஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் கடத்தல் கும்பல் சேஷாத்ரிபுரத்தை சேர்ந்த சிவசங்கர் (20), கணபதிநகரை சேர்ந்த யஷ்வந்த் படேல் (20), நெலமனகலை சேர்ந்த ஹேமந்த் (18), டி.தாசரஹள்ளியை சேர்ந்த சல்மான் கான் (23), உல்லாலை சேர்ந்த ராகுல் (20), தேஜாஸ் (18), ஹெசரகட்டாவை சேர்ந்த ராகேஷ் (21) மற்றும் யஷ்வந்த்பூரைச் சேர்ந்த ஷஷாங்க் கவுடா (19) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ஹேமந்த், சூர்யா மற்றும் விஷால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் கான் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மற்றவர்கள் மாணவர்கள் ஆவர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.