Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டால் மட்டுமே அரசால் நகர முடியும்; பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டால் மட்டுமே அரசால் நகர முடியும்; பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதியால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான பதில் கடிதம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றோம். ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டு தீர்மானத்தை மாற்றினாலன்றி, இந்த அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகின் வட் வரி நிலைவரம் தொடர்பில் இப்போதும் அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு எவ்வித அறிவும் இன்றி திட்டமிடலொன்று இன்றி வரி அறவிடப்படுகிறது.

திட்டமிடலொன்று இன்றி வரி அறவிடப்படும் போது பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரிக்கும்.

வரி விவகாரத்தில் மாத்திரமின்றி எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் திட்டமிடல் இன்றியே தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஜனாதிபதியால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான பதில் கடிதம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றோம்.

ஜனாதிபதி செயலகம் தபாலகத்துக்கு அருகில் காத்திருப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டு தீர்மானத்தை மாற்றினாலன்றி, இந்த அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ பதவி விலகினார். அன்று நாம் அடைந்த துயரத்தை விட இன்று அவரை பதவி விலகச் செய்தவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் அனைத்து மக்களையும் அந்த துயரத்திலிருந்து மீட்பதற்கான பொறுப்பு எமக்கிருக்கிறது. விரைவில் நாம் அதற்குரிய செயற்பாடுகளி;ல் ஈடுபடுவோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு