Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்ச பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள், ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் ஆடிஅமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை வியாழக்கிழமை நண்பகல் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

சபாநாயகரை 'வாயை மூடுங்கள்' என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.