Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (23) இரண்டு இலச்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டுபேர் கொண்ட ஆட்பிணையில் செல்ல உத்தரவிட்டு எதிர்வரும் செட்டம்பர் 23 ம் திகதி வழக்கை தவணையிட்டு ஒத்திவைத்தார்.

காத்தான்குடி நகரசபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர் அவரது வட்டாரமான கல்முனை பழைய வீதியிலுள்ள வடிகான் மூடி ஒன்று இல்லாமல் பலவருடங்களாக இருந்துள்ளதுடன் அந்தபகுதி பாடசாலை மாணவர்கள், பள்ளிவாசலுக்கு செல்வோர் உட்பட அந்த வீதி ஊடாக பாதசாரதிகள் பிரயாணிக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவந்துள்ளனர்.

இது தொடர்பாக சுயேச்சைக்குழுவின் நகரசபை உறுப்பினரின் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உறுப்பினரிடம் வடிகான் மீது இருந்த மூடி இல்லாததால் அந்த மூடியை அமைத்து தருமாறு கடித மூலம் கோரிக்கையிட்டனர். இந்த கோரிக்கை தொடர்பாக குறித்த உறுப்பினர் நகரசபை தவிசாளரிடம் கடித மூலமாகவும் வாய்மூலமாகவும் குறித்த பிரச்சனையை தீர்த்து தருமாறு கோரியுள்ளார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகியும் தவிசாளர் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

இதன் காரணமாக நகரசபை உறுப்பினர் அந்த பகுதியில் உள்ள வடிகானுக்கு அருகாமையில் அனாதாரவாக வீதிக்கு அண்மித்த பகுதில் கைவிடப்பட்டிருந்த வடிகான் மூடி ஒன்றை தனது சொந்த பணத்தில் இருந்து மணல் அகழ்வும் கனரக வாகனம் ஒன்றை 10 ஆயிரம் ரூபா பணத்தை வாடகையாக வழங்கி அதனை தூக்கி கொண்டு வடிகான் மீது வைததுள்ளார்.

இதனையடுத்து குறித்த சுயேச்சைக்குழு உறுப்பினர் தமது களஞ்சியசாலையில் இருந்த நகரசபைக்கு சொற்தமான வடிகான் மூடியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நகரசபை களஞ்சியசாலை பொறுப்பாளர் முறைப்பாடு ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை வழங்கியதையடுத்து உறுப்பினர் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை மட்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஹக்கீம் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகி அந்த பகுதியில் வடிகான் மூடி இன்றி ஆபத்தாக கிடந்த வடிகான் மூடியை சீர் செய்வதற்காக அருகாமையில் இருந்த நகரசபைக்கு சொந்தமான மூடியை எடுத்து அந்த வடிகானை சீர் செய்தார் எனவும் அவர்களுக்கு பிணைகோரி சமர்பணம் முன்வைத்தனர்.

இதனையடுத்து நீதவான் அவர்களை இரண்டு இலச்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பினையில் விடுவித்தார்.

இது தொடர்பாக பிணையில் வெளிவந்த நகரசபை உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நகரசபை தவிசாளர் ஒரு அரசியல் பழிவாங்கல் செய்து என்னை மட்டம் தட்டவேண்டும் என அந்தபகுதியில் இருந்த சுமார் 10 அடி தூரம் இருந்த வடிகான் மூடியை நகர்த்தி பாதுகாப்பற்று கிடந்த வடிகான்மீது வைத்து சீர் செய்தது திருட்டா?

நகர சபையில் அவர்கள் மட்டும் மக்களுக்கு சேவையை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டில் அவர் செயற்படுகின்றார் என்பதுடன் எனக்கு ஒரு அவமானப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என இதனை செய்துள்ளார். எனவே இவ்வாறான அச்சுறுத்தலுக்கு அடிபணியாது மக்களுக்காக நாம் தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுவோம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

June 17, 2026
அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
Next Post
சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.