Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, குறித்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட 104 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இது குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இந்த அழ்வினை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாக விபரித்துள்ளது.

எனினும், அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மினசோட்டா நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், விசாரணை முழுவதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செம்மணி மற்றும் மன்னார் போன்ற பிற இடங்களில் முன்னர் தோல்வியுற்ற விசாரணைகளை மேற்கோள்காட்டி, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயத்தை முறையாக விசாரிப்பதற்கு ஒரு தேசிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததை சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.

காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் அரசியல்மயமாக்கல் மற்றும் பயனற்ற தன்மை குறித்தும் அந்த ஆணைக்குழு கவலை தெரிவித்து, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளது.

நீதியை உறுதி செய்வதற்காக, சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

•சர்வதேச தடயவியல் மற்றும் மனித உரிமைகள் தரநிலைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

•மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

•பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்ட, உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

•எதிர்கால வழக்குகளுக்கான ஆதாரங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்.

•வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த சட்டத்தை தெளிவான வழிகாட்டுதல்களுடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

•அரச அதிகாரிகளால் கடுமையான குற்றங்களை விசாரிக்க சுயாதீனமானதொரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.

•கடந்தகால மற்றும் தற்போதைய அனைத்து மனித புதைகுழி விசாரணைகளின் முடிவுகளைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைமகள் பேரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

•எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் அதன் 60வது கூட்டத்தொடரில், செம்மணி புதைகுழி அகழ்வு போன்ற அண்மைய முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கை மீதான அதன் தீர்மானத்தை புதுப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

•அத்துடன், தொடர்ச்சியான தண்டனை விலக்கு மற்றும் இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு இணங்க இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கான ஆணைகள் நீடிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, செம்மணி விசாரணையை இலங்கை எவ்வாறு கையாளுகிறது என்பது நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டின் முக்கிய சோதனையாக இருக்கும் என்று சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.