கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இத்தகைய கட்டுமானங்களுக்கு வருடாந்த அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.








