ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுடன் மாலைதீவுக்கு சென்றுபின்னர் திரும்பும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்தமைக்காக, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்








