Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர் முரளீஸ்வரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பல் வைத்திய பிரிவின் வழிகாட்டலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இத்திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணர் வைத்திய கலாநிதி இ.உதயகுமார் தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் குறித்த வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை முகத்தாடை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நவீன் மாவட்ட பல் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எஸ் கோகுல ரமணா மட்டக்களப்பு மாவட்ட புற்றுநோய் விழிப்புணர்வு சங்க தலைவர் வைத்திய கலாநிதி பேராசிரியர் இ. கருணாகரன். இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை முகாமையாளர் கந்தசாமி ஸ்ரீதரன்உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீனவர்கள் மத்தியில் குறித்த வாய்ப்புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்

மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு குறித்த வாய்ப்பற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இடம்பெற்றன

மாவட்டத்தில் குறித்த வாய்ப்புற்று நோயை கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா மோஸ்டின் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா மோஸ்டின் இலங்கை விஜயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு