Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, புனர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஐடியினர் நேற்று வியாழக்கிழமை (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் 6ம் திகதி சந்தேகத்தில், சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு, அதில் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஐடியின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் சிஐடி யினர் மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு