Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வைத்தியர்களின் இடமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைத் திருத்துவது தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, சுகாதார அமைச்சுக்குள் வைத்தியர் இடமாற்றப் பட்டியல்களைத் தயாரித்தல், இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் விளைவாக எழுந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறுகின்றமை, தங்கள் சங்கத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
Next Post
கல்வி அமைச்சிலிருந்து 139 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக அறிக்கை

கல்வி அமைச்சிலிருந்து 139 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு