உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இன்று (15) தனது 57ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அவர்களின் புதல்வரான லொஹான், மத்திய மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.
அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








