Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் தென் எருவில் பற்று மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் தென் எருவில் பற்று மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் 18 ஆம் தேதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று (17) களுவாஞ்சிக்குடி நடைபெற்றது

“இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக எதிர்வரும் 18 ஆம் தேதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானத்து இருக்கின்றோம்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் முத்தையன்கட்டில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி கொண்டு வந்த இந்த வட கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களும் பூரண அனுசரனையினை தந்தமைக்கு தவிசாளர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம் பெறக்கூடாது. தமிழர்களுக்கு எந்த அநீதியும் இடம்பெறக்கூடாது. இதுதான் கடைசியாக நடைபெற்ற தமிழரின் உயிரிழப்பாக இருக்க வேண்டும். ஏன் இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்கிறோம் என்றால் எங்களுடைய நிலைமை அனைத்தும் சர்வதேச அளவுக்கு செல்ல வேண்டும், சர்வதேசம் உண்மையில் எங்களுக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும்.

புதிய அரசாங்கங்கள் வருகின்ற போது அரசாங்கங்கள் மாறுகின்றதே தவிர அவர்களது கொள்கைகள் இதுவரையில் மாறவில்லை. அவர்கள் உண்மையில் சிங்கள கொள்கையில் இருந்து அவர்கள் இன்னமும் மாறவில்லை தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு அரசாங்கம் வரும்போதும் எங்களை பாரிய அளவு எதிரியாக நினைக்கின்ற சிங்கள கட்சிகள் அனைத்திற்கும் சரியாக பாடமாக இருக்க வேண்டும். என்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு