Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு