Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தலைமையில் 2026 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் 2026 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்

1 year ago
in செய்திகள்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (19) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் திட்டங்களை திறம்பட செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதன் மூலம் கிராமங்களுக்கு பணம் சீராகச் செல்வதோடு கிராமப்புற பொருளாதாரம் வேகமாக வளர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட திட்டங்களை முறையாகவும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்துவதும், இந்த நன்மைகளை மக்களுக்கு வழங்குவதும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் குறித்து அதிக கவனம் செலுத்தவும், அவர்கள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்படுவதைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக எதிர்வரும் வரவு வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, நிதி அமைச்சு மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!
செய்திகள்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

November 27, 2026
வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்
செய்திகள்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

November 27, 2026
மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

November 27, 2026
மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!
செய்திகள்

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

November 26, 2026
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது
செய்திகள்

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

November 26, 2026
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு
செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

November 26, 2026
Next Post
பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு