Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞா.சிறிநேசன் இன்று (25) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது குறித்து கருத்து வெளியிட்டார்.

அவர் கூறியதாவது,

“சட்டவாட்சியை சரியாக கொண்டு செல்ல வேண்டுமெனில் சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் எனும் அடிப்படையில் பெரியவர், சிறியவர் என பேதமின்றி அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும். இந்த அடிப்படையில் முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரைப் பொறுத்தளவில், ஜே.வி.பி. இயக்கத்திற்கு தனிப்பட்ட ஆத்திரங்கள் உள்ளன. குறிப்பாக பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும், அது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. எனவே இந்த கைது, அந்த விடயத்தில் பழி தீர்ப்பதாக சிலர் கருதுகின்றனர்.”

அவர் மேலும் கூறுகையில், “சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமாக கருதப்பட வேண்டும் என்றால், கடந்த காலத்தில் ட்ரிபோலி பிளாட்டூன் என்ற பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் கடத்தல், காணாமல் ஆக்குதல், வதை, பாலியல் பலாத்காரம் போன்ற பல செயல்பாடுகள் நடத்தப்பட்டன. அந்தக் குழுவின் கீழ் செயல்பட்டவர்கள் மற்றும் அதற்கு அரசியல் பாதுகாப்பு அளித்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், யாராக இருந்தாலும், சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு நியாயமான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

சிறிநேசன் குறிப்பாக சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை மற்றும் கொக்கட்டிச்சோலை–மகிழடித்தீவு படுகொலை போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும், “ரணில் விக்கிரமசிங்க கைது விவகாரத்தை சில எதிர்க்கட்சியினர் தங்களுக்கான எதிர்கால விசாரணைகளைத் தடுக்க பயன்படுத்தக்கூடும். அதேவேளை, இந்த கைது பௌத்த மேலாதிக்கம் மற்றும் சிங்கள மேலாதிக்க அடிப்படையில் அரசியல் பலமாக மாற்றப்படலாம் என்ற அபாயமும் உள்ளது. இது நாட்டில் புதிய மோதல்களையும் பழிவாங்கல்களையும் தூண்டும் அபாயம் அதிகம்,” என்றும் அவர் எச்சரித்தார்.

இறுதியாக, “சட்டத்தின் முன்னிலையில் யாரும் விலக்கு பெறக்கூடாது. ரணிலின் கைது ஒரு தொடக்கம் மட்டுமே; கடந்த காலத்தில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் உண்மையான சட்டவாட்சி நிலைநாட்டப்படும்,” என்று சிறிநேசன் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்
செய்திகள்

ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

July 28, 2026
Next Post
பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு