Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான கிழக்கு பல்கலை மாணவர்கள் சரீரப் பிணையில் விடுதலை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான கிழக்கு பல்கலை மாணவர்கள் சரீரப் பிணையில் விடுதலை

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ள தையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 9 மாணவர்கள், 7 மாணவிகள் உட்பட 16 பேரை நேற்று புதன்கிழமை (03) மாலை சிஐடி யினர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் 3 ம் ஆண்டில் தொழில்நுபட்ப பீடத்தில் கல்விகற்றுவரும் மாணவ குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் மாணவிகள் மீது கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பகிடிவதையால் பாதிக்கப்பட்ட ஹிம்புட்டான அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன்மீது கொடூரமாக தாக்கப்பட்டு பகிடிவதை மேற்கொண்டதாகவும் ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும், 3ம் ஆண்டு மாணவர்குழுவுக்கு எதிராக 26.10.2023 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டையடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் குழு ஒன்று சம்பவதினமான நேற்று காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு 16 மாணவர்களையும் அழைத்து அங்கு வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்ற பின்னர், மாலை 4.45 மணிக்கு 1998 ஆம் ஆண்டு 20 ஆம் எண் கல்வி நிறுவனங்களில் சோதனை மற்றும் பிற வகையான வன்முறைகள் (தடை) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் 9 மாணவன்கள், 7 மாணவிகள் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு