Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; இந்திய ஊடகங்கள் செய்தி

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; இந்திய ஊடகங்கள் செய்தி

12 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தெரிவிக்கப்படுகையில்,

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான மூன்று பைபர் படகுகளில் 12 மீனவர்கள் கடந்த 10ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (11) இரவு 10 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அதிவிரைவு பைபர் படகு மூலம் எல்லை தாண்டி அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களை கல் மற்றும் பைப், கயிறு கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அடுத்தடுத்த படகுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் மீனவர்கள் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன், ரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி படகின் எஞ்சின், தங்க சங்கிலி, ஜிபிஎஸ் கருவி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்துக் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பிய நிலையில் காயமடைந்த 3 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் வருகின்றனர்.

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் காயமடைந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில
அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேசமயம் இவ்வாறான சம்பவங்கள் நீண்ட வருடங்களாக நடந்து வருவதாகவும், மத்திய பாஜக அரசு இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸின் தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
வவுனியா மாநகரசபை அமர்வில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை!

வவுனியா மாநகரசபை அமர்வில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.