ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’வுக்கும் தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’ படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினர் தகவல்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








