Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன.

பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்து இருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையையும் சர்வதேச தலையீட்டடையும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதேவேளை, இந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ்த் தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.சபையிடமும், குறிப்பாக மையக் குழு நாடுகளிடமும் இலங்கைக்கு விசேட அறிக்கையாளரை (country specific spécial rapporteur) நியமிக்க அழுத்தம் கொடுக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
செய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

July 27, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு
செய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

July 27, 2026
மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது
செய்திகள்

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

July 27, 2026
தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
செய்திகள்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

July 27, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு