ராஜபக்ஷ குடும்பத்தினர் இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இலங்கை மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ அரசியலுக்கு வந்துள்ளதால் கட்சிக்கான ஆதரவு இரட்டிப்பாகும் எனக் கூறப்படுவது எந்த அடிப்படையும் இல்லாத வெறும் கதையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜபக்ஷ தரப்பினர் பேரணிகளை நடத்தினாலும், மக்கள் ஏற்கனவே தெளிவான அரசியல் தீர்மானத்தை எடுத்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பேரணிகள் அல்லது மேடைப் பேச்சுகள் நாட்டின் சுயாதீன நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.







