அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் வழங்கும் வகையில் “Sri Lanka Police App” என்ற புதிய அலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தேசிய அடையாள அட்டை கொண்ட இலங்கையர்கள் இந்த செயலியில் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
திருட்டு, கொள்ளை, விபத்து, தாக்குதல், ஆபத்தில் சிக்குதல் அல்லது குழந்தைகளுக்கு ஏற்படும் அவசரநிலைகள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் SOS வசதியைப் பயன்படுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும்.
அவசரநிலையில் SOS பொத்தானை 10 விநாடிகள் அழுத்துவதன் மூலம், பயனர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை Play Store மூலம் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய முடியும். 119 அவசர இலக்கத்துடன் மேலதிகமாக, செயலி மூலமும் பொலிஸாரை விரைவாகத் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








