Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல்கார்களுக்கு சொந்தமான 354 பவுண் தங்க நகைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் சேகரிக்கப்பட்டதாக கூறப்படும் 72 வாகனங்கள், 35 வீடுகள், 34 ஏக்கர் காணிகள் மற்றும் 67 கோடி ரூபா பணம் ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 57 இலட்சத்துக்கும் அதிகமானோர் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6,082 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலையீட்டுடன் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் விசேட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 35,035 சந்தேகநபர்களும் இதன்போது கைதாகியுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 47,600 சாரதிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகளின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் 66, கைதுப்பாக்கிகள் 69, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 50 உள்ளடங்களாக 1,996 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நாட்டில் உள்ள குற்ற வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களாவர்.

ஆகையால் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முன்னுரிமையளித்து சம்பந்தப்பட்ட சந்தேகபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் 1,267 கிலோ கிராம் ஹெரோயினுடன் 56,082 சந்தேகபர்களும், 1868 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 64,690 சந்தேகநபர்களும், 14,281 கிலோ கிராம் கஞ்சா அல்லது கேரள கஞ்சாவுடன் 57,005 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

மேலும் 552 கிலோ கிராம் ஹசிஸ், 32 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 35 இலட்சம் போதை மாத்திரைகள் என்பனவும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய நாவுல மொரகாகந்த நீர்த்தேக்கத்திலிருந்து 2128 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு