சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியை முடித்த 16 பேர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிய தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (16) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வழங்கப்பட்டன.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாட், பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரீ.எம். இன்ஷாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தாதியர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாக மாவட்டத்திற்குள் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் தாதியர்கள் தங்களது புதிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றுவோம் என உறுதியளித்ததோடு, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.













