தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக இன்றிலிருந்து (17) பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு விசேட பஸ் சேவைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு இயக்கப்படும்.
குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பாதைகளில் பயணிகள் சேவை அதிகரிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








