“டெங்கு அற்ற கிராமம் ” என்ற தொனிப் பொருளில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு கிரானில் நடைபெற்றது.
கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தின் 151 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு கிரான் விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த நிகழ்வினை கிரான் பழைய மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று (18) காலை பாடசாலை வளாகத்தில் அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்று பாடசாலையின் 151 வது தினம் நினைவு கூறப்பட்டது.
பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக குழுக்களாக பிரிந்து பொது மக்கள் வாழும் வீடுகளுக்கு சென்று டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பின்னர் வீடுகளில் தேங்கி கிடந்த பாவனையற்ற கழிவு பொருட்கள் பல பிரதேச சபையின் உளவு இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது .குறித்த நிகழ்வில் மதகுருமார் பாடசாலை நிர்வாகம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரிகள் பழைய மாணவர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

















