Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் கட்சியின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலா நாசகார செயல் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் புல்லு மலை வட்டார உறுப்பினர் சிவானந்தனின் வீட்டிற்கு கடந்த (18) இரவு இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் அதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கை இன்னும் நாசகார சாதிக் குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில். நாட்டில் இன்று வரை வன்முறை சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இன் நிலையில் தமிழரசுக் கட்சி, ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் நடைபெற்ற பல்வேறு படுகொலை சம்பவங்களுக்கு எதிராக போராடி வரும் அதேவேளை ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல படுகொலைகள் குறித்த சாட்சியங்களை அரசுக்கு வழங்கி உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் ஒருவர். அவர் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுவப்படுவதற்கு எதிராக மிகத்தீவிரமாக செயற்பட்டு அதற்கு எதிராக பிரதேச சபையினால் பிரேரணை ஒன்றை முன்வைத்து அதன் ஊடாக புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவருடைய வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது ஒரு நாசகார சதிச் செயல்; இந்த சம்பவத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள், உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இவ்வாறான நாசகார சதிச் செயல் எமது கட்சியின் சுதந்திரமான செயல்பாட்டிற்கும், கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் தான் தமிழரசுக் கட்சிக்கு இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றால், அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலும் தமிழரசுக் கட்சியின் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

எனவே இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தி பொலிஸார் சிறந்த முறையில் விசாரணைகளை நடாத்தி குறித்த சம்பவம் யாரால்? எதற்காக? என்ன நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்,‌ உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்
@battinaatham_official

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள் https://battinaatham.net/?p=152839 #srilankan #Batticaloa #battinaatham #srilanka #TamilNews #Srilankan #Batticalo

♬ original sound – battinaatham_official – battinaatham_official
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
Next Post
தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.