மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய நேற்று முருகப்பெருமானுக்கு விசேட பூஜை நடைபெற்று பிற்பகல் 3:30 மணி முதல் சூரன்போர் நடைபெற்றது. இதன் போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
சூர சம்ஹாரம் முடிவடைந்து, சுவாமிக்கு பட்டுச்சாத்தி, விசேட பூஜை நடைபெற்றது. இவ்வாலயமானது பழமையான ஆலயமாக இருந்தாலும் புத்திதாக நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதன் முறையாக சூரசம்ஹாரம் நடைபெற்ற ஆலயமாகும்.
இதேவேளை சுவாமியை தரிசிக்க மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து அடியார்கள் வருகை தந்திருந்தனர்.





















