Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும்,இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். சர்வதேச மட்டத்தில் மென்மேலும் வெற்றிப் பெறுவதற்கு அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்விடயத்தின் இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட கூடாது.

வீராங்களை பாத்திமா ஷபியா யாமிக் பற்றி சமூக ஊடகங்களில் பலர் மாறுப்பட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது. அனைத்து விடயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியாது.

வைத்தியசாலைகளில் முஸ்லிம் தாதியர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் கலாசார ஆடையணிவது தற்போதைய பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நிகாப் ஆடைக்கு இன்று அனுமதிக் கொடுத்தால் எதிர்காலத்தில் புர்காவுக்கும் அனுமதிக்கு கொடுக்கும் நிலை ஏற்படும்.

முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு ஹிஜாப் வகையிலான சீறுடை அணிய அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.சுற்றறிக்கை ஊடாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரியை கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார். சூத்திரதாரியை தேடுவதற்கு மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அதனுடன் இணைந்த விடயங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

July 31, 2026
டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

July 31, 2026
Next Post
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.