ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமா இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5)ஆம் பிரிவுக்கு அமைய, குறித்த வெற்றிடம் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்திற்கான புதிய உறுப்பினரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.








