Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03) வழங்கப்படவுள்ளன.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நியமன நிகழ்வு நடைபெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத் துறைக்காக ஒரே நேரத்தில் அதிகளவான வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஆயுர்வேத சேவையினை மேம்படுத்துவதற்கும், தரமான நோயாளர் பராமரிப்புச் சேவையை வழங்குவதற்கும், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள ஆரம்ப நிலை வைத்திய அதிகாரிப் பதவி வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டும், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இந்த புதிய வைத்திய அதிகாரிகள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் சில உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

November 25, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!

November 25, 2026
வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?
செய்திகள்

வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?

November 25, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!

November 25, 2026
Next Post
பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு