Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் போதைப்பொருள் வியாபாரம் செய்தால் ஆதாரத்தை காட்டுங்கள்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

வடக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் போதைப்பொருள் வியாபாரம் செய்தால் ஆதாரத்தை காட்டுங்கள்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.

அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது.

தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது.

கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான் இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
டெய்சி பாட்டிக்கு வியாதி; அதனால் அவர் மீது வழக்கு தொடர முடியாதாம்

டெய்சி பாட்டிக்கு வியாதி; அதனால் அவர் மீது வழக்கு தொடர முடியாதாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு