Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

22 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு இன்று (27) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களுக்கும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களுக்கும் என மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 12.14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் மேலதிக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மிகவும் வறிய குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 17,500 ரூபா அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிகமாக 3,000 ரூபாவும், வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவுடன் மேலதிகமாக 2,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த மேலதிக நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அவசர நிவாரணத்திற்காக 2.41 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக கொடுப்பனவு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!

November 27, 2026
இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!
செய்திகள்

இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!

November 27, 2026
மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர
செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை
செய்திகள்

பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை

November 27, 2026
இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!
செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!

November 27, 2026
சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!
காணொளிகள்

சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

November 27, 2026
Next Post
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு