2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் 52 முக்கிய அரச நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் இழப்பில் உள்ளன என்று நிதி அமைச்சின் மிட்-இயர் ஃபிஸ்கல் ரிப்போர்ட் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கும் வரிப்பணியாளர்களுக்கும் புதிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முறையில் 280.7 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இலாபம் 227.8 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது.
CEB, இலங்கை ஏர்லைன்ஸ், லங்கா ஷுகர் – மிகப்பெரிய இழப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை மின்சார சபை (CEB)
2025 ஜூன் 30 வரையில் 13.2 பில்லியன் ரூபாய் வரிக்கட்டணத்துக்கு முன் இழப்பு
2024 இல் லாபம்: 144 பில்லியன் ரூபாய்
2023 இல் லாபம்: 57.6 பில்லியன் ரூபாய்
இலங்கைன் ஏர்லைன்ஸ்
2025 ஏப்ரல்–ஜூன்: 12 பில்லியன் ரூபாய் இழப்பு
மொத்த இழப்பு: 628 பில்லியன் ரூபாய்
நிறுவனத்தின் equity: –415 பில்லியன் ரூபாய் (நெகட்டிவ்)
மொத்த கடன்ச்சுமை: 606.7 பில்லியன் ரூபாய்
BBC வெளியிட்ட செய்தியின்படி,
வருவாய் பல்வகைப்படுத்தல் குறைவு, அதிக வட்டி மற்றும் கடன் செலுத்தும் சுமை எனும் காரணங்கள் இழப்புக்கு வழிவகுக்கின்றன என தெரிவித்துள்ளது.
அரசாங்கம் USD 210 மில்லியனும் ரூ. 31.4 பில்லியனும் மதிப்பிலான காலாவதியாகிய கடன்களை அமைப்புச் சீரமைப்பு மூலம் தீர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கியுள்ளது.
Lanka Sugar Company
2025 ஜூன் வரையில் இழப்பு: 2.6 பில்லியன் ரூபாய்
2024 இழப்பு: 1.9 பில்லியன் ரூபாய்
2023 லாபம்: 2.8 பில்லியன் ரூபாய்
இவை அனைத்திற்கும் மிகப்பெரிய காரணம் “அரசியல் தலையீடு, ஒழுங்கின்மை, தகுதியற்ற நியமனம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கே 2026 பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அரசியல் தலையீடு,நிதி ஒழுங்கு மீறல், திறமையை விட பரிந்துரையால் நியமனங்கள் எனும் காரணங்களால் அரச நிறுவனங்கள் நாட்டிற்கு பெரிய நிதிச்சுமையாகிவிட்டதாகக் கூறினார்.
பல நிறுவனங்கள்; வங்கி கடன், வரி EPF/ETF பணம் எதையும் செலுத்த இயலாத நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவற்றை செலுத்த 11 பில்லியன் ரூபாய் அரசு வழங்கியுள்ளதையும் தெரிவித்தார்.
அதேசமயம் அரசாங்கம், வர்த்தக அல்லது நிர்வாக தேவையில்லாத நிறுவனங்களை மூடுதல், ஒரே பணிகளைச் செய்யும் நிறுவனங்களை இணைத்தல்; சொந்த நோக்கத்திலிருந்து விலகிய நிறுவனங்களை மறுசீரமைத்தல் எனும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
2025 ஜூன் 30 நிலவரப்படி இழப்பில் உள்ள நிறுவனங்கள்
Ceylon Electricity Board
SriLankan Airlines Ltd
Lanka Sugar Company Ltd
State Engineering Corporation
Lanka Sathosa Ltd
Hotel Developers (Lanka) Ltd
State Development & Construction Corporation
Sri Lanka Rupavahini Corporation
State Timber Corporation
Independent Television Network (ITN)
Sri Lanka Broadcasting Corporation
State Printing Corporation
Ceylon Fisheries Harbour Corporation
National Livestock Development Board
Janatha Estate Development Board
Sri Lanka State Plantation Corporation
Sri Lanka Cashew Corporation
Ceylon Fisheries Corporation
EPF/ETF, வரி செலுத்த முடியாமல் Treasury ஆதரவு தேவைப்பட்ட நிறுவனங்கள்
Lanka Sugar Pvt Ltd
Janatha Estate Development Board
Sri Lanka State Plantation Corporation
Sri Lanka Rupavahini Corporation
Ceylon Fisheries Corporation
National Livestock Development Board
Elkaduwa Plantations Ltd
Sri Lanka Broadcasting Corporation
North Sea Ltd
Lanka Ceramics Joint Venture Corporation
முக்கிய அரச வங்கிகளின் இலாபம் 65.5 பில்லியன் ரூபாய் உயர்ந்துள்ளதுடன், மேலும் சில துறைகள் இலாபம் அதிகரித்துள்ளன என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Sri Lanka Ports Authority
National Water Supply & Drainage Board
Employees’ Trust Fund Board
ஆகியவை 2025 முதல் அரையாண்டில் நல்ல செயல்திறன் காட்டியுள்ளன.
அரசாங்கம் 2026க்குள் 33 செயலற்ற நிறுவனங்களை மூடவும், பிற நிறுவனங்களை திறன் இலக்குகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.








