Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு சம்பவம்: 23 வயது இளைஞன் உட்பட கடை உரிமையாளர் கைது – 18 தொலைபேசிகள் மீட்பு

மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு சம்பவம்: 23 வயது இளைஞன் உட்பட கடை உரிமையாளர் கைது – 18 தொலைபேசிகள் மீட்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (13) வியாழக்கிழமை இரவு ஏறாவூரில் வைத்து கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் பெர்னார்ந்தே தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய எண் கொண்ட பூட்டு உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உடனடியாக சம்பவ தினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் றித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது குறித்த தொலைபேசிகளை மட்டு போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து கடை உரிமையாளர் உட்பட இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் களணி ஒன்று உட்பட உபகரணங்களை மீட்டனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை மட்டு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 23 வயதுடையகுறித்த இளைஞன் கிழமையில் ஒரு நாள் வைத்தியசாலைக்குள் நுழைந்து வாட்களில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மலசல கூடம் செல்லும் போது அவர்களின் கையடக்க தொலைபேசி பணம் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்துள்ளதாகவும்,
அதை ஏறாவூரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் திருத்தம் குறித்த கடையில் கொடுத்து கையடக்க தொலைபேசியின் இரகசிய எண் கொண்ட பூட்டை உடைத்த பின்னர் அதனை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
சித்தாண்டி–சந்தனமடு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு; 80 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது

சித்தாண்டி–சந்தனமடு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு; 80 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.